Proverbs Tamil & English

ஒத்த பழமொழிகள் PARALLEL PROVERBS
அகத்தின் அழகு முகத்திலே The face is the index of the mind
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா? Spare the rod and spoil the child
அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா? Christmas comes but once a year.
அரசன் அன்றே கொல்லும்;தெய்வம் நின்று கொல்லும். The mills of God grind slow but sure.
அலை மோதும்போதே தலை முழுகு. Strike while the iron is hot.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள். Make hay while the sun shines.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும். Every bird must hatch its own eggs.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் (விஷம்) நஞ்சாகும். Too much of anything is good for nothing.
நாளைக்குக் கிடைக்கும் பலாக் காயை விட இன்று இருக்கும் களாக்காய் மேல். A bird in the hand is worth two in the bush.
ஆபத்துக்குப் பாவம் இல்லை. Necessity knows no law.
ஆழமறியாமல் காலைவிடாதே Look before you leap.
ஆனைக்கும் அடி சறுக்கும் Good Homer Sometimes nods.
   
பட்ட காலிலே படும்இகெட்ட குடியே கெடும். Misfortunes never come single.
பதறிய காரியம் சிதறும். Haste makes waste.
பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான். Jack of all trade is master of none.
பார்த்தால் பூனை;பாய்ந்தால் புலி. Lamb at home and a lion at chase.
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். Calm before the storm.Stoop to conquer.
பொறுத்தார் பூமி ஆள்வார். Blessed are the meek;for they shall inherit the earth.
மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை. Do unto others as you would wish to be done by others;Do as you would be done by.
மாரியல்லது காரியமில்லை. No rains,no grains.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல. All that glitters is not gold.
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படலாமா? First deserve,then desire.
வெளுத்ததெல்லாம் பாலாகுமாஇகருத்ததெல்லாம் நீராகுமா? All are not saints that go to church.
வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும். Prevention is better than cure.
வெருங்கை முழம் போடுமா? Bare words buy no barley.
வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம்இ கால் பட்டால் குற்றம். Faults are thick when love is thin.
வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி? The law-maker should not be a law breaker.
ஆனைக்கும் பானைக்கும் சரி. Tit for tat.
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே;கேடுவரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே. Coming events cast their shadow before.
இக்கரைக்கு அக்கரை பச்சை. Distance lends enchantment to the view.
இனம் இனத்தைச் சேரும். Birds of the same feather flock together.
எத்தால் வாழலாம்?ஒத்தால் வாழலாம். Union is strength.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல். Add fuel to the fire(flames)
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே;பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே. Count not your chickens before they are hatched.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும். East or West,Home is Best.
ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு. Every tide has its ebb.
கடுகு போன இடம் ஆராய்வார்;பூசனிக்காய் போன இடம் தெரியாது? Penny-wise and pound-foolish.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை. Rob peter and pay paul.
கல்வி கரையிலஇகற்பவர் நாள் சில. Art is long and life is short.
கழுதை அறியுமா கற்பூர வாசனை? Casting pearls before swine.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. Many a slip between cup and lip.
சர்க்கரை என்றால் தித்திக்குமா? Fair words butter no parsnips.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. Do not look a gift horse in the mouth.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். Blood is thicker than water.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். Man proposes,God disposes.
நோயுற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். Health is wealth.