விவாகப் பொருத்தம்

நட்த்திரம் தேவதை கணம் யோனி விருட்சம்
அச்சுவினி சரஸ்வதி தேவ ஆண்குதிரை காஞ்சுரை
பரணி துர்க்கை மனுஷ ஆண்யானை நெல்லி
கார்த்திகை அக்கினி ராட்த பெண்ஆடு அத்தி*
ரோகிணி பிரமா மனுஷ ஆண்பாம்பு நாவல்*
மிருகசீரிடம் சந்திரன் தேவ பெண்பாம்பு கருங்காலி
திருவாதிரை உருத்திர மனுஷ பெண்நாய் செங்காலி
புநர்பூசம் அதிதி தேவ பெண்பூனை மூங்கில்
பூசம் வியாழன் தேவ ஆண்ஆடு அரசு*
ஆயிலியம் ஆதிசேட ராட்த ஆண்பூனை புன்னை*
மகம் சுக்கிரன் ராட்த ஆண்எலி ஆல்*
பூரம் பார்வதி மனுஷ பெண்எலி பலாசு*
உத்தரம் சூரியன் மனுஷ ஆண்மாடு அலரி*
அத்தம் சாத்தா தேவ பெண்எருமை ஆத்தி*
சித்திரை துவஷ்டா ராட்த பெண்புலி வில்வம்
சுவாதி வாயு தேவ ஆண்எருமை மருது
விசாகம் ஸ்கந்தர் ராட்த ஆண்புலி விளா
அனுஷம் இலக்குமி தேவ பெண்மான் மகிழ்
கேட்டை இந்திரன் ராட்த ஆண்மான் பராய்*
மூலம் அசுரர் ராட்த ஆண்நாய் மரா*
பூராடம் வருணன் மனுஷ ஆண்குரங்கு வஞ்சி*
உத்தராடம் விநாயகர் மனுஷ ஆண்கீரி பலா*
திருவோணம் விஷ்ணு தேவ பெண்குரங்கு எருக்கு*
அவிட்டம் வசுக்கள் ராட்த பெண்சிங்கம் வன்னி
சதயம் யமன் ராட்த பெண்குதிரை கடம்பு
பூரட்டாதி குபேரன் மனுஷ ஆண்சிங்கம் தேமா*
உத்தரட்டாதி காமதேனு மனுஷ பெண்மாடு வேம்பு
ரேவதி சனி தேவ பெண்யானை இருப்பை*

1. கிரகப் பொருத்தம்.

கிரகங்கள் சூரியன் சனி,ராகு கேது செவ்வாய்
இடம்:- 1, 7, 8 2, 4, 12 1, 7, 8 2, 4, 12
நட்பு ... ... 4 1 8 2
ஆட்சி... ... 8 2 16 4
உச்சம் ... 12 3 24 6
பகை நீசம் 16 4 32 8

இங்கனம் கணக்கிட்டுக் கூட்டிவந்த தொகையைப் பதினாறாற் பிரித்தபேறு கிரகபாபசங்கியையாம். இருவருக்கும் கிரகபாபம் இல்லையாயினும் இருவர் பாபசங்கியைகளும் சமமாயினும் உத்தமம். ஒருவர்பாபத்தினும் மற்றவர் பாபம் ஒன்று வரையிற் குறையின் மத்திமம். ஒன்றிற்கு மேற் குறையின் பொருந்தாது. செவ்வாயினால் ஏற்படும் பாபம் மற்றைய கிரகங்களின் பாபங்களாற் சாந்தியாகாது. இருவர் சாதகத்திலும் செவ்வாய் தோஷம் ஏறக்குறையச் சமமாயிருப்பின் நன்று.

2. நட்த்திரப் பொருத்தம்.

பெண் ஆண் இருவருக்கும் ஒரே நட்த்திரமாயின் அது ரோகிணி, திருவாதிரை, மகம், அத்தம், விசாகம், திருவோணம், உத்தரட்டாதி, ரேவதி என்ப வற்றுள் ஒன்றானால் உத்தமம். அச்சுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், புநர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்தராடம் என்பவற்றுள் ஒன்றாயின் மத்திமம். ஏக நட்த்திரம் இரண்டு இராசிக்குப் பங்குபட்டதாயின் முதல் இராசிப்பாதம் ஆணுக்காயின் நன்று பெண்ணுக்காயின் நீக்கப்படும்.

வேறு நட்த்திரமானால் பெண் நட்த்திரம் முதல் புருஷநட்த்திரம் வரை எண்ணிக் கண்ட தொகை2-4-6-8-9-11-13-15-17-18-20-22-24-26 என்பனவற்றுள் ஒன்றாயினும், 27-ம் நாள் ஏகராசியாயினும் உத்தமம்.

12-ம் நாளின் 2, 3, 4-ம் கால்களும் 14-ம் நாளின் 1, 2, 3-ம் கால்களும் 16-ம் நாளின் 1, 2, 4-ம் கால்களும் 21-23-25-ம் நாட்களும் ஆகிய இவற்றுள் ஒன்றாயின் மத்திமம்.

பெண் நட்த்திரபாதத்தினின்றும்88- ம் பாதம் 22-ம் நாளிலாவது 23-ம் நாளிலாவது அமையின் அது வைநாசிகம் என்று நீக்கப்படும்.

இதிற் சொல்லப்படாத நாட்களாயின் பொருந்தாது.

3. கணப் பொருத்தம்

பெண் நட்த்திரமும் புருஷ நட்த்திரமும் ஒரேகணமாயின் உத்தமம்; மனுஷகணமும் தேவகணமுமாயின் மத்திமம்; தேவகணமும் இராட்த கணமுமாயினும் மனுஷகணமும் இராட்தகணமுமாயினும் பொருந்தாது.

4. மாஹேந்திரப் பொருத்தம்

பெண்ணிணுடைய நட்த்திரம் முதலாக 4-7-10-13-16-19-22-25-ம் நாட்கள் புருஷநாளாகவரின் பொருந்தும்.

5. ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்

பெண்ணினுடைய நட்த்திரம் முதலாகப் புருஷன் நட்த்திரம் 13க்கு மேற்படின் உத்தமம். 9-க்கு மேல் 13 வரையில் இருக்கில் மத்திமம். 9 வரை பொருந்தாது.

6. யோனிப் பொருத்தம்

இருவருக்கும் ஒரு யோனியாயினும் பகையில்லாத யோனிகளில் ஆண் யோனி ஆணுக்கும் பெண்யோனி பெண்ணுக்கு மாயினும் இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம்; இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம்; ஆணுக்குப் பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றினுக் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது. ஒன்றினுக்கொன்று பகையோனிகள்
குதிரை - எருமை
யானை - சிங்கம்
குரங்கு - ஆடு
பாம்பு - கீரி

7. இராசிப் பொருத்தம்

பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும் பெண் இராசிக்கு புருஷன் இராசி 6-க்கு மேற்படினும் உத்தமம். பெண் இராசிக்குப் புருஷன் இராசி 2 ஆயின் மிருத்து; 3 ஆயின் துக்கம்;; 4 ஆயின் தரித்திரம்;; 5ஆயின் வைதவ்வியம். 6 ஆயின் புத்திரநாசம். இடபம் முதலான இரட்டை இராசிகளிற் பிறந்த பெண்ணுக்கு 2ஆம் இராசி புருஷனிராசியாகவரினும், மேடம் முதலான ஒற்றை இராசிகளிற் பிறந்த பெண்ணுக்கு 6ம் இராசி புருசனிராசியாக வரினும் மத்திமம், பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாகும் போது பெண் நட்த்திரத்திற்குப் புருஷநட்த்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது. (இராசி) என்பது சந்திரலக்கினத்தைக் குறிக்கும்.

8. இராசியதிபதிப் பொருத்தம்

இருவர் இராசியதிபர்களும் ஒருவ ராயினும் ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். சத்துருக்களாயின் பொருந்தாது.
கிரகம் மித்துருக்கள்
சூரியன் - குரு
சந்திரன் - புதன், குரு
செவ்வாய் - புதன், சுக்கிரன்
புதன் - சந்தி, செவ், குரு, சுக்,சனி
குரு - சூரிய, சந்தி, புத, சுக், சனி
சுக்கிரன் - செவ், புதன், குரு, சனி
சனி - புதன், குரு, சுக்கிரன்
மித்துரு அல்லாதவர் சத்துருக்கள்.

9. வசியப் பொருத்தம்

மேடத்துக்கு வசியம் சிங்கம், விருச்சிகம்
இடபத்துக்கு ,, கர்க்கடகம், துலாம்
மிதுனத்துக்கு ,, கன்னி
கர்க்கடகத்துக்கு ,, விருச்சிகம், தனு
சிங்கத்துக்கு ,, துலாம்
கன்னிக்கு ,, மிதுனம், மீனம்
துலாத்துக்கு ,, மகரம்
விருச்சிகத்துக்கு ,, கர்க்கடகம், கன்னி
தனுவுக்கு ,, மீனம்
மகரத்துக்கு ,, மேடம், கும்பம்
கும்பத்துக்கு ,, மேடம்
மீனத்துக்கு ,, மகரம்
பெண் இராசியும் புருஷன் இராசியும் ஒன்றாயினும் பெண் இராசிக்குப் புருஷனிராசி வசியமாயிருப்பதுடன் புருஷனிராசிக்குப் பெண்ராசி வசிய மாயிருப்பினும் பெண்ணிராசிக்குப் புருஷனிராசி வசியமாகப் புருஷனிராசிக்குப் பெண்ணிராசி வசியமில்லாதிருப்பினும். உத்தமம்.
புருஷனிராசிக்குப் பெண்ணிராசி வசியமாக பெண்ணி ராசிக்குப் புருஷனிராசி வசியமில்லா திருப்பின் மத்திமம்.
இருவர் இராசிகளும் ஒன்றினுக் கொன்று வசியமில்லா திருப்பின் பொருந்தாது.

10. இரச்சுப் பொருத்தம்

சிரோரச்சு: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
கண்டரச்சு: ரோகிணி, திருவாதிரை, அத்தம், சுவாதி, திருவோணம்,சதயம்
நாபிரச்சு: கார்த்திகை, புநர்பூசம், உத்தரம், விசாகம், உத்தராடம், பூரட்டாதி.
ஊருரச்சு: பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்தரட்டாதி.
பாதரச்சு: அச்சுவினி, ஆயிலியம், மகம், கேட்டை, மூலம், ரேவதி.
ஸ்திரீ புருஷர்களுடைய நட்த்திரங்கள் ஒருரச்சுவிலிருந்தாற் பொருந்தாது. அவை சிரோரச்சுவிலிருந்தாற் புருஷன் மரணம்;; கண்டரச்சுவிலிருந்தாற் பெண் மரணம்;; நாபி ரச்சுவிலிருந்தாற் புத்திரநாசம்; ஊரு ரச்சுவிலிருந்தால் தனநாசம்; பாத ரச்சுவிலிருந்தால் தூரதேச வாசம்.

11. வேதைப் பொருத்தம்

அச்சுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புநர்பூசம் - உத்தராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்தரட்டாதி
உத்தரம் - பூரட்டாதி
அத்தம் - சதயம்
மிருகசீரிடம் - சித்திரை-அவிட்டம்
ஸ்திரீபுருஷர்களுடைய நட்த்திரங்கள் மேற்குறித்தவாறு ஒன்றினுக்கொன்று வேதையாயிருப்பிற் பொருந்தாது. மாறிவரிற் பொருந்தும்.

12. விருட்ப் பொருத்தம்

இருவர் நாட்களும் பால்மரமாகில் அதிக பிள்ளைகளும், பாக்கியமுண்டாம்; பெண் நாள் பால்மரமும் புருஷநாள் வைர மரமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண் நாள் வைரமரமும் புருஷநாள் பால்மரமுமாகில் அற்ப பிள்ளைப்பேறு இருவர் நாளும் வைரமரமாகில் புத்திர சேதமும் பொருட்சேதமுமாம்.

13. ஆயுட் பொருத்தம்

பெண் நட்த்திரம் முதல் புருஷன் நட்த்திரம் வரையும் எண்ணின தொகையையும் புருஷன் நட்த்திரம் முதல் பெண் நட்த்திரம் வரையும் எண்ணின தொகையையும் தனித்தனி 7 ஆல் பெருக்கி 27 ஆல் பிரித்து வந்த மிச்சங்களில் இரு தொகைகளும் சமமாயினும், பெண்ணினுடைய நாளின் தொகை 7 வரை குறையினும் உத்தமம், புருஷனுடைய நாளின் தொகை 7 வரை குறையின் மத்திமம், ஒரு தொகையிலும் பார்க்க மற்றது 7க்கு மேற் குறையின் பொருந்தாது.

14. புத்திரப் பொருத்தம்

ஐந்தாமிடம் ஐந்துக்கதிபன் குரு இவர்கள் பாவ வர்க்கமடைந்து பாபர் சேர்தல் நோக்குதல் பெற்றிருப்பினும் 6, 8, 12-ம் அதிபர்களுடன் கூடியிருப்பினும் ஐந்துக்கதிபனும் குருவும் பெலவீனராய் 6, 8, 12-ம் இடங்களிலிருப்பினும் புத்திர தோஷமுண்டாம். சுபர் சேர்தல் நோக்குதல் உண்டாயின் மேற்கண்ட தோஷங்கள் சாந்தியாகும். பெண்ணுக்கும் புருஷனுக்கும் புத்திர தோஷமின்றாயின் உத்தமம். பெண்ணுக்கு மாத்திரம் புத்திர தோஷமின்றாயின் மத்திமம். பெண்ணுக்குப் புத்திர தோஷம் அதிகமிருப்பினும் இருவருக்கும் புத்திர தோஷமிருப்பினும் பொருந்தாது. விவாகப் பொருத்த நிச்சயம்
நட்த்திரம் முதல் வேதையீறான பத்துப் பொருத்தங்களுள் நட்த்திரம், கணம், யோனி, இராசி, இரச்சு இவை ஐந்தும் முக்கியமாகும். பிராமணருக்கு அதிபதியும், ட்த்திரியருக்கு கணமும், வைசியருக்கு ஸ்திரீ தீர்க்கமும், சூத்திரருக்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும். பத்துப் பொருத்தங்களுள் ஐந்துக்குமேற் பொருந்தின் உத்தமம். ஐந்து பொருந்தின் மத்திமம். நட்த்திரங்களைக் கொண்டறியப்படும் பொருத்தங்களிலும் கிரகநிலையைக் கொண்டறியும் பொருத்தமே முக்கியமானது. ஆதலின் ஸ்திரீ புருஷர்களின் கிரகநிலைகளை நன்காராய்ந்தே பொருத்த நிச்சயஞ் செய்தல் வேண்டும்.

விவாகப் பொருத்த நிச்சயம்

1.நட்த்திரம் முதல் வேதையீறான பத்துப் பொருத்தங்களுள் நட்த்திரம், கணம், யோனி, இராசி, இரச்சு இவை ஐந்தும் முக்கியமாகும். பிராமணருக்கு அதிபதியும், ட்த்திரியருக்கு கணமும், வைசியருக்கு ஸ்திரீ தீர்க்கமும், சூத்திரருக்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும்.

2.பத்துப் பொருத்தங்களுள் ஐந்துக்குமேற் பொருந்தின் உத்தமம்.

3.ஐந்து பொருந்தின் மத்திமம்.

4.நட்த்திரங்களைக் கொண்டறியப்படும் பொருத்தங்களிலும் கிரகநிலையைக் கொண்டறியும் பொருத்தமே முக்கியமானது. ஆதலின் ஸ்திரீ புருஷர்களின் கிரகநிலைகளை நன்காராய்ந்தே பொருத்த நிச்சயஞ் செய்தல் வேண்டும்.